colect
பேஸ்புக்கில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் பின் தொடரப்படுபவர்தான், கேரளாவின் கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் IAS.. தனது மாவட்டத்திலுள்ள பிஷாரிகாவு எனும் ஏரியை சுத்தப்படுத்த வருமாறு அங்குள்ள தன்னார்வலர்களுக்கு பேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்தார். மேலும் அப்படி வருபவர்களுக்கு சுவையான ‘ஸ்பெஷல் கோழிக்கோடு பிரியாணி’ காத்திருக்கிறது என்றும் ஆசையை தூண்டினார்.
இந்த அரிய வாய்ப்பை நழுவ விட விரும்பாத அவ்வூர் இளைஞர்கள் பெரும்படையாக திரண்டு, 57 ஆயிரம் சதுர அடி ஏரியை அசால்ட்டாக தூர்வாரி சுத்தப்படுத்தினர். இப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும், தான் வாக்களித்தபடியே ஸ்பெஷல் கோழிக்கோடு பிரியாணியை வரவைத்து, அதை அவர்களுடன் சேர்ந்தே சாப்பிட்டார் கலெக்டர் பிரசாந்த்.
கடந்தாண்டு கோழிக்கோடு மாவட்ட கலெக்டராகப் பொறுப்பேற்ற பிரசாந்த், நம்மூர் சகாயம் போன்று அங்கு சமூக நோக்கோடு பல்வேறு ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். அதனால் தான் அவரை ‘ப்ரோ’, ‘ராக்ஸ்டார்’ என்று மக்கள் செல்லமாக அழைத்து வருகிறார்கள்..
சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது பேஸ்புக் பக்கம் மூலம் நிவாரணப் பொருட்கள் திரட்டி அனுப்பி வைத்தவரும் இவர்தான்..
நன்றி : Ambuja Simi