மும்பை: சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட்டில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்றுள்ளார் முன்னாள் நட்சத்திரம் கவாஸ்கர்.

அவர் கூறியுள்ளதாவது, “சென்னை முதல் டெஸ்ட்டில், குல்தீப் சேர்க்கப்பட்டிருந்தால் வித்தியாசத்தை உணர்ந்திருக்கலாம். அஸ்வினும் சுந்தரும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி பந்து வீசுபவர்கள். சுந்தரைப் பொறுத்தவரை, பிரிஸ்பேன் மற்றும் முதல் இன்னிங்ஸில் அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதைப் பார்க்கையில், அவரை அணியிலிருந்து எடுப்பதெல்லாம் நடக்காத காரியம்.

ஷாபாஸ் நதீம் பந்துவீசிய விதம் குறித்து நான் எதையும் பேச விரும்பவில்லை. ஆகமொத்தம், சென்னையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட்டில், சுந்தர் & நதீம் ஆகிய இருவரில், ஒருவரின் இடத்தில் குல்தீப் இடம்பெறுவது அவசியம் என்று கருதுகிறேன். ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோருக்கு அவுட்டாக்க வேண்டும்” என்றார் அவர்.