சென்னை

மிழகத்தில்  இன்றைய (11/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,43,690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,402 பேர் உயிர் இழந்து 8,26,994 பேர் குணம் அடைந்து தற்போது 4,294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,32,918 பேர் பாதிக்கப்பட்டு 4,120 பேர் உயிர் இழந்து 2,27,226 பேர் குணம் அடைந்து தற்போது 1,572 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 55,018 பேர் பாதிக்கப்பட்டு 676 பேர் உயிர் இழந்து 53,879 பேர் குணம் அடைந்து தற்போது 463 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,954 பேர் பாதிக்கப்பட்டு 772 பேர் உயிர் இழந்து 50,912 பேர் குணம் அடைந்து தற்போது 270 பேர் சிகிச்சையில் உள்ளனர்.