சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்தின் உறவினர் திண்டிவனத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டத்துறை அமைச்சராக இருந்து வருபவர் சி.வி.சண்முகம். இவரது உறவினரான டி.கே.குமார் என்பவர் திண்டிவனத்தில் வசித்து வருகிறார்.அவர் சரியான முறையில் வருமான வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரில், அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அமைச்சர்கள், வருமானத்தை மீறி ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணத்தை சேர்த்து வருவதாக திமுக உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அமைச்சரின் உறவினர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சசிகலா சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய நிலையில், அவர் அதிமுகவிற்குள் மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டி வந்த சண்முகம், சசிகலா காரில் அதிமுக கொடி கட்டி வரக்கூடாது என்றும் டிஜிபி அலுவலத்திற்கு சென்று புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் சி.வி.சண்முகம். ‘’தினகரனையும் சசிகலாவையும் மீண்டும் அதிமுகவில் இணைப்பது என்பது கனவிலும் நடக்காத காரியம்’’ என்றதுடன், தினகரனிடம் இருந்து சசிகலாவை காப்பாற்ற வேண்டும் என்றும் அதிரடியாக கூறியது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel