சென்னை: சசிகலா தொடர்ந்து அதிமுக கொடியை பயன்படுத்தி வருவது சட்ட விரோதம், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில் நேற்று காலை பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு வருகை தந்தார். அவர் வந்த காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது, இது தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் புகார் கொடுத்ததால் சசிகலா அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என போலீஸ் தெரிவித்த நிலையிலும், சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட அதிமுக நிர்வாகிகளின் கார் பயணித்தார். அதனால், அவரது காரில் இருந்து கொடியை அகற்ற முடியாத நிலை உருவானது.
இதுகுறித்து இன்று செய்தியளார்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சண்முகம்,சசிகலா தொடர்ந்து அதிமுக கொடியை பயன்படுத்தி வருவது சட்ட விரோதம். அதற்கான தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.