அறிவோம் தாவரங்களை – காரைச்செடி

காரைச்செடி. (Canthium parviflorum)

தமிழகம் உன் தாயகம்!

காட்டுப் பகுதியில் வேலிகளில் தரிசு நிலங்களில் வளரும் நாட்டு முள்செடி நீ!

தேனீக்கள் அதிகம் விரும்பும் பூச்செடி நீ!

அத்திப்பழத்திற்கு நிகரான பழம் கொடுக்கும் அழகு செடி நீ!

5 அடி உயரம் வரை வளரும் அற்புத முள்செடி நீ!

திருக்கச்சி நெறிக் காரைக்காடு கோவில் தலமரம் நீ!

திருஞானசம்பந்தர் (‘காரை,கூகை முல்லை’ 2.84.1) போற்றும் தெய்வச் செடி நீ!

மலச்சிக்கல், வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வயிற்றுக்கடுப்பு, குடல் புண், குடல் வாய்வு, வாதவலி ,ஆசனவாய் நமைச்சல் & அரிப்பு, பல்வலி, சீதபேதி ஆகிய வற்றுக்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

குழந்தைகளுக்கும் பறவைகளுக்கும் காரை பழம் கொடுக்கும் காரமுள் செடி நீ!

இலையும் முள்ளும்  மாற்றடுக்கில் அமைந்த நலமிகு செடியே!

மஞ்சள் நிற கனி கொடுக்கும்   மகிமை செடியே!

வயல் வரப்புகளின் உயிர் வேலியே! காற்று &   மாசு தடுப்பானே!

வெள்ளை நிற பூப் பூக்கும் நல்ல செடியே!

விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் வினோத செடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📱9443405050.