ஆபாசப்பட நடிகை சன்னி லியோன் மீது கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள பெரும்பாவூரை சேர்ந்த ஷியாஸ் என்பவர், கொச்சி குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார்.
“சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நடிகை சன்னி லியோனிடம் 29 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தேன். ஆனார் அவர் நிகழ்ச்சிக்கு வராமல் ஏமாற்றி விட்டார்” என கூறி இருந்தார்.
தற்போது கேரளாவில் நடைபெறும் டி.வி. தொடர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்துள்ள சன்னி லியோனியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் “நிகழ்ச்சிக்கு வருவதாக நான் ஒப்புக்கொண்டது உண்மை தான். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஐந்து முறை நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டனர்” என விளக்கம் அளித்தார்.
“வேறு ஒரு நாளில் நிகழ்ச்சிக்கு நாள் குறித்து கொடுத்தால் நான் கலந்து கொள்கிறேன்” என்றும் அவர் போலீசில் தெரிவித்தார்.
“அங்கமலியில் காதலர் தினத்தன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வற்காக சன்னியிடம் பணம் அளித்தேன். நிகழ்ச்சிக்கு நடப்பதற்கு சில மணி நேரம் முன்பாக அதனை சன்னி ரத்து செய்தார். இதனால் நான் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன்” என மலையாள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஷியாஸ் தெரிவித்துள்ளார்.
– பா. பாரதி