வாஷிங்டன்
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் 49,000 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய மாதம் 2,27,000 பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டதால் தற்போது இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தொழில் துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் ஜனவரி மாதத்தில் 0.4 சதவீதத்திலிருந்து 6.3% ஆக குறைந்துள்ளது என வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நிரந்தரமாக வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 3.5 மில்லியனாக இருந்தது, ஆனால் இது பிப்ரவரி மாதத்தை விட 2.2 மில்லியன் அதிகம் என்று அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து மீண்டும் எல்லாம் பழைய நிலைக்கு திரும்பி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.