இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இரண்டில் ஒன்று முடிவு தெரியும் நிலையை எட்டியுள்ளது.

மூன்றாவது நாள் முடிவடைந்த நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் பாகிஸ்தான் அணி, 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், மொத்தமாக 200 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது.

அதாவது, மூன்றாம் நாள் முடிவில், அந்த அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 129 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. துவக்க வீரர் இம்ரான் பட் டக்அவுட்டாக, அசார் அலி அதிகபட்சமாக 33 ரன்களை எடுத்து அவுட்டானார். பாபர் ஆஸம் 8 ரன்களுக்கு நடையைக் கட்டினார். பஹீம் அஷ்ரப் 29 ரன்களை அடித்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில், ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்டுகளையும், கேசவ் மகராஜ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளனர்.

இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் இலக்கை தென்னாப்பிரிக்கா எட்டுமா? அல்லது சரணடைந்துவிடுமா? என்று உறுதியாக முடிவு தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.