சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 477 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,41,326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,382 பேர் உயிர் இழந்து 8,24,527 பேர் குணம் அடைந்து தற்போது 4,417 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,32,168 பேர் பாதிக்கப்பட்டு 4,114 பேர் உயிர் இழந்து 2,26,487 பேர் குணம் அடைந்து தற்போது 1,567 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 54,753 பேர் பாதிக்கப்பட்டு 673 பேர் உயிர் இழந்து 53,506 பேர் குணம் அடைந்து தற்போது 474 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,764 பேர் பாதிக்கப்பட்டு 770 பேர் உயிர் இழந்து 50,697 பேர் குணம் அடைந்து தற்போது 297 பேர் சிகிச்சையில் உள்ளனர்.