சென்னை: வடசென்னையின் பிரபல ரவுடியான கல்வெட்டு ரவி கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்மீது 6 கொலை, 35 வழக்குகள் உள்பட ஏராளமான புகார்கள் நிலுவையில் உள்ளன. பலமுறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள், மாற்றுக்கட்சியினரை தங்களது கட்சிக்கு இழுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பாரதியஜனதா கட்சியோ, மொள்ளமாரிகளையும், ரவுடிகளையும் கட்சியில் இணைத்து வருகிறது. ஏற்கனவே பல ரவுடிகள் பாஜகவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி கயவர்களின் கூடாரமாக மாறி உள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலின்போது எதிர்க்கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ரவுடிகளை பாஜக கட்சியில் சேர்த்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில்,கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வடசென்னையின் பிரபல ரவுடியாக கல்வெட்டி ரவி, பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் மீது,
கேளம்பாக்கம் கன்னியப்பன் கொலை, தண்டையார் பேட்டை வீனஸ் படுகொலை, ராயபுரம் பிரான்சிஸ் படுகொலை, பொக்கை ரவி கொலை, வண்ணாரப்பேட்டை சண்முகம் படுகொலை என மொத்தம் 6 படுகொலைகள் உள்பட 35 வழக்குகள் உள்ளது. இதுவரை , 6 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்றவர். இவர் பாஜக தயவுடன் நடமாடி வந்த நிலையில், தற்போது தமிழக காவல்துறையினர் கல்வெட்டு ரவுடியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel