டெல்லி: போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்தியது உத்தரப் பிரதேச போலீஸ். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 72வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளைக் கொண்ட நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் இன்று விவசாயிகளை போராட்டக்கள்ததில் சந்திக்க காசியாபாத் சென்றனர். இந்த குழுவில், திமுக எம்.பி.க்களான திருச்சி சிவா, கனிமொழி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விசிக எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் உள்பட பலர் இடம்பெற்றிருந்தனர்.
டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் அடிப்படை தேவைகள் மறுக்கப்பட்டு வருகிறது. குடிநீர், இணைய தள சேவை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்களை எதிரிகளைப் போல் அரசு நடத்துகிறது. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்திஉள்ளது.
இதையடுத்து, விவசாயிகளின் பிரச்சனையை கேட்டறிய டெல்லி காசிப்பூர் எல்லையில் உள்ள விவசாயிகளை நேரில் சந்திக்க எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்க இன்று காசியாபாத் சென்று கொண்டிருந்தனர்.
அவர்களை உ.பி. மாநில எல்லையில், மாநில காவல்துறை தடுத்து நிறுத்தியது. அவர்களை காசியாபாத் செல்ல அனுமதி மறுத்து வருகின்றனர். அவர்களுடன் எம்.பி.க்கள் வாக்குவாதம் செய்து வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.