டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,07,77,284 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,53,221 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. தற்போது, நாடு முழுவதும் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாடு முழுவதும கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்து 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,07,77,284 ஆக உயர்நதுள்ளது.
இந்த எண்ணிக்கை நேற்றும் நீடித்தது. நேற்று காலை 8 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 11 ஆயிரத்து 39 பேர் புதிதாக கொரோனாவிடம் சிக்கி உள்ளனர். இவர்களையும் சேர்த்து நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சத்து 77 ஆயிரத்து 284 ஆகியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 110 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 596 ஆகியிருக்கிறது. மரண விகிதம் 1.43 ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 30 பேர், கேரளாவில் 16 பேர், பஞ்சாப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்படி 24 மணி நேரத்தில் மரணம் எதுவும் நிகழவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய அம்சமாகும்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்த 14 ஆயிரத்து 225 பேர். இதுவரை 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 631 பேர் குணமடைந்து உள்ளனர். குணமடைந்தோர் சதவிகிதம் 97.08 ஆக உள்ளது.
நாடு முழுவதும் இதுவரை, 19 கோடியே 84 லட்சத்து 73 ஆயிரத்து 178 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.