சென்னை: அரசு பணியில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அதிமுக – பாமக இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக, திமுக, மநீம  கட்சியினர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியலையே அறிவித்து வட்டது.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, தமிழக அரசிடம் வன்னியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகிதம் ஒதுக்க வேண்டும் என போராட்டத்தில் குதித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக கூட்டணியில் முரண்டு பிடித்து வருகிறது. வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு அளித்தால் மட்டுமே அதிமுக கூட்டணியில் இணைவோம் என்று பாமக தரப்பில்  கூறப்பட்டது.

இதையடுத்து, அதிமுக அமைச்சர்கள் ராமதாஸை தைலாபுரம் இல்லத்தில்  சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து, இன்று, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து அமைச்சர்கள் குழுவுடன் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. கூட்டத்தில் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல் பேச்சுவார்த்தையில் பாமக தலைவர் ஜி.கே. மணி, ஏகே மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உட்பட 6 பேர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தின் முடிவில் பேச்சுவார்த்தை குறித்து தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சட்டத்திற்காக மக்களா? மக்களுக்காகச் சட்டமா? என்றும் மக்களுக்காகத் தான் சட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதனால் தான் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுவரை 104 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.