பெங்களூரு: 4ஆண்டு சிறை தண்டனை முடிவடைந்து, விடுதலையடைந்துள்ள சசிகலா வரும் 7ந்தேதி அன்று தமிழகம் வருகிறார் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். பிப்ரவரி 7ந்தேதி அன்றுதான் சசிகலாவை எதிர்த்து, ஓபிஎஸ், ஜெ. சமாதியில் மவுன விரதம் தொடங்கினார். அதே நாளில் சசிகலா தமிழகம் திரும்புவது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிவடைந்த சசிகலா ஜனவரி 27ந்தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதார். முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பெங்களூரு விக்டோரியா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.31) அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்  செய்யப்பட்ட நிலையில்,  பெங்களுரு தேவனஹள்ளியில் உள்ள விடுதியில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினரகன், சசிகலா  வரும்  பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளதாக  தெரிவித்துள்ளார்.  மேலும்,  சசிகலா தலைமையில் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றவர், ஜெயலலிதா ஆட்சியை அமைக்க அதிமுகவை மீட்டெடுக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றும்,  உண்மையான தொண்டர்கள், விஸ்வாசத்தின் பக்கம் உள்ளவர்கள் சசிகலாவிற்கு உறுதுணையாக இருக்கிறார்கள், சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக இருந்து நம்மை வழி நடத்துவார்  எனவும் அவர் தெரிவித்தார்.

இதே பிப்ரவரி 7ந்தேதி 2017ம் ஆண்டுதான், சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் ஜெயலலிதா சமாதியில் மவுன விரதம் மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.,நினைவிடத்தில் ஓபிஎஸ் திடீர் அஞ்சலி….அரசியலில் பரபரப்பு