டெல்லி: பாஜகவின் தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந் நிலையில், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அசாம் மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் நரேந்திர தோமர், கேரளாவுக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, புதுச்சேரிக்கு மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.