டெல்லி: ககன்யான் திட்டம் நடப்பாண்டு (2021) டிசம்பரில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் இன்று முதன்முறையாக டிஜிட்டல் வடிவிலான பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டவர், நிலவுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் ககன்யான் திட்டத்தை டிசம்பர் 2021ல் செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், அதற்காக ககன்யான் பணி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நான்கு இந்திய விண்வெளி வீரர்கள் ரஷ்யாவில் பொதுவான விண்வெளி விமான அம்சங்கள் குறித்து பயிற்சி பெறுகின்றனர். கூறினார்.
மேலும் ஆழ்கடல் ஆராய்ச்சி (டீப் ஓஷன் மிஷன்) திட்டத்துக்கு ரூ .4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.