கோவை: முகமது நபி குறித்து அவதூறு: பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையானது. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆங்காங்கே இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக புகார்களும் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமனை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்மீது, தேசிய ஒருமைபாட்டை சீர்குலைக்க முயற்சித்தல், மதங்களிடையே பிரிவினை ஏற்படுத்தி மோதல் ஏற்படுத்த முயற்சித்தல், உட்பட IPC 147,148,149,504,506(2), 153(a),153(b),269 உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கல்யாணராமன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel