சிட்னி:
கொரோனா பரவலில் இந்தியாவின் செயல்பாடு மிக மோசம் என்று இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து Lowy Institute நடத்திய ஆய்வில், கொரோனா பரவலின்போது சிறப்பாக செயலாற்றிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 86வது இடம் கிடைத்துள்ளது.
இதுகுறித்த நடத்தப்பட்ட ஆய்வில் 98 நாடுகளில் பங்கேற்றன. நியூசிலாந்து முதலிடம் பிடித்துள்ள இந்த பட்டியலில் இந்தியாவின் செயல்பாடு ஈராக், வங்கதேச நாடுகளை விட மோசமாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிகப்பட்டுள்ளது. கடைசி இடத்தில் பிரேசில், மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.