அறிவோம் தாவரங்களை – பற்பாடகம் செடி
பற்பாடகம் செடி.(Mollugo cerviana).
தமிழகம் உன் தாயகம்!
மணற்பாங்கான இடங்களில் தானே வளர்ந்து கிடக்கும் தங்கச் செடி நீ!
கைப்புச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்ட கைகண்ட மருந்து செடி நீ!
1.5.அடி உயரம் வளரும் உன்னத செடி நீ!
’சீதவாதசுரம் தீராத தாகமும் போகும்; போது இரு கண் குளிரும்….. பற்பாடகம் உன்னி பார்’ எனச் சித்தர்கள் போற்றும் சிறந்த செடியே!
கப வாத சுரம்,பித்த தாக நோய், உளமாந்தம், பித்த தோஷம்,கண்குளிர்ச்சி, உடல் எரிச்சல், தாகம், மழலைகள் பேதி, காய்ச்சல், நச்சுக் காய்ச்சல், கீல்வாதம், உடல் நாற்றம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
கம்பி போன்ற கிளைகளை உடைய தம்பிச் செடியே!
தடித்த வேர்கொண்ட தளிர்ச் செடியே !
நீண்ட ஊசி போன்ற இலைகளை உடைய நேர்த்தி செடியே!
வெள்ளை நிற பூப் பூக்கும் நல்ல செடியே!
முட்டை வடிவ விதைகளைக் கொண்ட குட்டை செடியே!
அழிக்கப்பட்ட காடுகளில் அபரிமிதமாக வளரும் கற்பக செடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்
நெய்வேலி.
☎️9443405050