
படங்களில் நடிப்பது மட்டுமின்றி கனா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் இருந்துள்ளார்.
டாக்டர் மற்றும் அயலான் படங்களின் ஷூட்டிங்குகள் சமீபத்தில் முடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இவர் நடிக்கும் அடுத்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு டான் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பு மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.
https://twitter.com/Siva_Kartikeyan/status/1354300603623563264
Patrikai.com official YouTube Channel