டெல்லி: டிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சீனாவுடனான எல்லை மோதலுக்கு பிறகு கடந்தாண்டு ஜூன் மாதம், சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதையடுத்து, அந்த செயலிகளின் நிறுவனங்களுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.
ஆனால் அந்த நிறுவனங்கள் அளித்த பதில் திருப்தியாக இல்லாததால், அவற்றுக்கு நிரந்தர தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவுடனான எல்லை மோதலுக்கு பிறகு கடந்த ஆண்டு டிக்டாக் உள்பட 59 சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இந்த செயலிகள், நாட்டின் இறையாண்மை ஆகியவற்றிற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளன என்பதன் அடிப்படையில் தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.