டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,90,279 ஆக உயர்ந்து 1,53,751 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 12,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,06,90,279 ஆகி உள்ளது.  நேற்று 127 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,53,751 ஆகி உள்ளது.  நேற்று 13,021 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,03,58,328 ஆகி உள்ளது.  தற்போது 1,73,737 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,405 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,13,353 ஆகி உள்ளது  நேற்று 47 பேர் உயிர் இழந்து மொத்தம் 50,862 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,106 பேர் குணமடைந்து மொத்தம் 19,17,450 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 43,811 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 529 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,36,956 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,204 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 738 பேர் குணமடைந்து மொத்தம் 9,18,099 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,293 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,99,953 ஆகி உள்ளது.  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,644 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,290 பேர் குணமடைந்து மொத்தம் 8,24,446 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 71,609 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 172 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,87,238 ஆகி உள்ளது  நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,150 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 203 பேர் குணமடைந்து மொத்தம் 8,78,731 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,357 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 523 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,35,803 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,325 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 695 பேர் குணமடைந்து மொத்தம் 8,18,742 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,736 பேர் சிகிச்சையில் உள்ளனர்.