மே.வங்க மாநிலத்தில் காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் உடன்பாடு ஏற்பட்டது..

மே.வங்க மாநிலத்தில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது சாரிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன.

இரு கட்சித் தலைவர்கள் இடையே தலைநகர் கொல்கத்தாவில் நேற்று  தொகுதிப் பங்கீடு  செய்வது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதில் முதல் கட்டமாக 77 தொகுதிகளில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில்  காங்கிரஸ்  கட்சி வென்ற 44 தொகுதிகளில், இந்த முறையும் அந்த கட்சியே போட்டியிடும் என இந்த பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டது..

கடந்த தேர்தலில் இடதுசாரிகள் வெற்றி பெற்ற 33 தொகுதிகளையும், அவர்களுக்கே  விட்டுக்கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அந்த மாநிலத்தில்  மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. உடன்பாடு எட்டப்படாத 217 இடங்களில் இரு கூட்டணியும் போட்டியிடும் தொகுதிகள் விரைவில் முடிவு செய்யப்படும் எனப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் பட்டாச்சார்யாவும், இடதுசாரிகளின் தலைவர் பீமன் போசும் அறிவித்தனர்.

இரு கட்சிகளும் கூட்டாகத் தேர்தல் பிரச்சாரம் செய்வது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 =பா.பாரதி..