சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை வழக்கமாக பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் தான் தெரிவித்து குழப்பம் உருவாக்குவார்கள்.

இப்போது தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி எம்.எல்.ஏ. வித்யாசாகர் ராவ் என்பவர், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு கட்டுவதற்கு எதிராக கருத்து தெரிவித்து, தெலுங்கானா மாநிலத்தில் இந்து அமைப்புகள் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்.

 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு, நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதனை விமர்சித்து வீடியோவில் அறிக்கை வெளியிட்டுள்ள வித்யாசாகர் ராவ் “அயோத்தியில் மட்டும் ராமர் கோயில் கட்டினால் போதுமா? நமது ஊர்களில் கட்ட வேண்டாமா? எனவே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி கேட்டு வந்தால், யாரும் நன்கொடை கொடுக்க வேண்டாம், நமது ஊரிலேயே ராமர் கோயில் கட்டுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இந்து அமைப்புகள் ஐதராபாத்தில், முதல்-அமைச்சர் கே.சந்திரசேகர ராவ் மற்றும் வித்யாசாகர் ராவின் உருவப்பொம்மையை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

– பா. பாரதி