மும்பை
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2779, கர்நாடகாவில் 324 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 20,03,657 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இன்று 50 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 50,684 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 3,419 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 19,06,827 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 44,926 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
கர்நாடகாவில் இன்று 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 9,34,576 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 12,190 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 890 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 9,15,382 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 6,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம் இடத்தில் உள்ளது.