லண்டன்: பிரிட்டனில் லாக்டவுன் எப்போது விலக்கி கொள்ளப்படும் என்பது இப்போது சொல்ல முடியாது என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய காலத்தில் ஐரோப்பிய நாடுகள் பரவலாக கட்டுப்படுத்திவிட்டன. ஆகையால் மற்ற உலக நாடுகளுக்கு முன்பாகவே ஐரோப்பிய நாடுகள் கொரோனா முடக்கத்திலிருந்து தளர்வுகள் அறிவிக்க ஆரம்பித்தன.
ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உருமாறிய கொரோனா தாக்கம் வெகு வேகமாக பரவத் தொடங்கியது. அதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு பிரிட்டன். நாள்தோறும் பாதிப்புகளும், பலி எண்ணிக்கைகளும் அதிகரிக்க தொடங்கின. இதனை தொடர்ந்து மீண்டும் பொது முடக்கத்தை அறிவித்தது பிரிட்டன்.
இந் நிலையில், லாக்டவுன் எப்போது விலக்கி கொள்ளப்படும் என்பது இப்போது சொல்ல முடியாது என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:
கிறிஸ்துமசுக்கு சற்று முன்னதாகவே நாங்கள் உருமாறிய கொரோனாவின் தாக்கத்தை காண்கிறோம். இது உண்மையில் மிக வேகமாக பரவுகிறது என்பதில் சந்தேகமில்லை என்றார்.