பெங்களுரூ:
பெங்களுரூ விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசு மருத்துவமனையில் இருந்து, விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார் என்றும், அங்கு அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார். அதனைதொடர்ந்து ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
வருகிற 27-ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் சசிகலாவுக்கு கொரோன தொற்று ஏற்பட்டு இருப்பது, அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.