பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், ஆனால், தொடர் சிகிச்சைக்காக இன்னும் 4 நாட்கள் மருத்துவ மனையில் இருக்க அறுவுறுத்தப்பட்டுள்ளது என பெங்களூரு அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உடல்நலக்குறைவு என சிறையில் இருந்து ஆம்புலன்சில் சாதாரணமாக அழைத்துச்செல்லப்பட்ட சசிகலா, சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், அவருக்கு மூச்சுத்திணறல் அதிகம் இருப்பதாக கூறி, இரவு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவின் உடல்நிலை தொடர்பான செய்தியில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. வருகிற 27 ந்தேதி விடுதலையாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், சசிகலா உடல்நலப்பாதிப்பு என கூறி, சிறைத்துறை உதவியுடன் நாடகம் ஆடி வருவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது அரசு மருத்துவமனை நிர்வாகம், சசிகலா உடல்நிலை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், நேற்று RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்ட நிலையில் RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இருந்தாலும், தொடர் சிகிச்சைக்காக இன்னும் 4 நாட்கள் மருத்துவமனையில் இருக்க அறுவுறுத்தப்பட்டுள்ளது இன்று அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட இருப்பதாகவும் – பெங்களூரு அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.