பெங்களூரு

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு காரணமாகச் சிறை மருத்துவமனையில் இருந்து வெளி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  வரும் 27 ஆம் தேதி அன்று அவர் விடுதலை ஆக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சிறையில் சசிகலாவுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.  அவருக்குத் தொடர்ந்து ஜுரம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி அவர் பரப்பன அக்ரகாரா சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  அவருக்கு ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆக்சிஜன் குறைவு நிற்காமல் தொடர்ந்ததால் சசிகலாவைச் சிறை அதிகாரிகள் சிறை மருத்துவமனையில் இருந்து போயிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிப்பதால் அவருக்குப் பரிசோதனை நடைபெற உள்ளது.  அவர் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=F0O781Puf04]