மாஸ்கோ :
ரஷ்யா-வில் ஒவ்வொரு ஆண்டும் இயேசு கிறிஸ்து ஞானஸ்தானம் பெற்ற நாளில் பாரம்பரிய முறையில் பழமைவாத கிருத்துவர்கள், நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கம்.
அந்த வகையில், இன்று ரஷ்யாவில் இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது, அப்போது அதிபர் புடின், உள்ளாடை மட்டுமே அணிந்து வெற்று உடம்புடன் மைனஸ் 14 டிகிரி குளிரில், சிலுவை வடிவில் இருந்த நீச்சல் குளத்தில் இறங்கி உறைபனி நீரில் மூன்று முறை மூழ்கி எழுந்தார்.
கம்யூனிச நாடான ரஷ்யா-வில் மத வழிபாடு விவகாரங்களில் அதிபராக இருப்பவர்கள் பங்கேற்பது இல்லை, ஆனால் சமீப காலங்களாக அதிபர் புடின் பல்வேறு மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.