டெல்லி: மேற்கு வங்கத்தை தொடர்ந்து அசாம் சட்டப்பேரவை தேர்தலிலும் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
2021ம் ஆண்டு தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக களம் இறங்கி உள்ளன. மேற்குவங்க பேரவைத் தேர்தலை இடதுசாரிகளுடன் சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இந் நிலையில், மேற்கு வங்கத்தை தொடர்ந்து அசாம் சட்டப்பேரவை தேர்தலிலும் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முன்னதாக ஏபிபி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் 126 தொகுதிகள் கொண்ட அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 73 முதல் 81 தொகுதிகள் வரையும், காங்கிரஸ் கூட்டணி 36 முதல் 44 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.