டெல்லி: ஜனவரி 29ம் தேதி முதல் நாடாளூமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறி இருப்பதாவது:-மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரையும், மாநிலங்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையும் நடைபெறும்.
நேரமில்லா நேரம், கேள்வி நேரம் நடைபெறும். நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படும்.
கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று கூறினார்.