டெல்லி: இதுவரை பெற்ற சுதந்திரம் அனைத்தும் போராடி பெற்றதே… விவசாயிகள் போராட்டம் குறித்து ராகுல்காந்தி ‘பளீச்’சென பதில் தெரிவித்தார். நான் ஒரு தேசபக்தன், யாரையும் கண்டு நான் பயப்படுவதில்லை என்றும் மோடி அரசுக்கு காட்டமாக பதில் கூறினார்.
மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி, டெல்லி எல்லையில் வடமாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 9கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையில், போராட்டத்துக்கு தடை விதிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றமும், போராட்டத்துக்கு தடை விதிக்க மறுத்ததுடன், வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், 26ந்தேதிகுடியரசுத்தினத்தன்று டெல்லியில், டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கு தடை விதிக்க கோரிய மனுவை விசாரித்த நீதிமன்றம், இது விஷயத்தில் காவல்துறை தேவையான நடவடிக்கை எடுக்கட்டும் என்று கூறியதுடன் வழக்கை 20ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மோடிஅரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார்.
விவசாயிகள் போராட்டம் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு பதில் தெரிவிக்க மறுத்த ராகுல்,
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு குறித்த கேள்விக்கு பதில் தெரிவித்த ராகுல, உச்சநீதிமன்றத்தின் யதார்த்தத்தை அறிவேன்” இந்தியா முழுதும் அறியும் என்றார்.
நான் ஒரு தேசபக்தன், யாரையும் கண்டு நான் பயப்படுவதில்லை. அவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் எனக்கு எதிராக தோட்டாக்களை பயன்படுத்தலாம். நான் நாட்டிற்காக தனியாக நிற்க வேண்டியிருந்தால், நான் தனியாக நின்று போராடுவேன் என்றார்.
மேலும், இந்த 3 வேளாண் சட்டங்களும், விவசாயிகளை பலவீனப்படுத்தும் ஒரு செயல்முறையாகும் என்றுவிமர்சித்தவர், இந்த சட்டங்களால், விவசாயிகள் மிகவும் பலவீனமடைவார்கள்,
ஆனால், மோடியின் இறுதி விளையாட்டு விவசாயத்தை, அவரது 3-4 நண்பர்களுக்கு விற்க வேண்டும் என்பதே, அதனால், அவர்களுக்காக மோடி, எதையும் நிறுத்த மாட்டார்.
நாம் போராட வேண்டும், உங்களது சுதந்திரம் பறிக்கப்படுகிறது, இதுபோன்ற நடவடிக்கைகள் இதற்கு முன்பு நடந்தது. .நாம் அவைகளை எதிர்த்துப் போராடினோம். இன்று நம்மிடம் உள்ள அனைத்தும் நாம் போராடி பெற்றதே… இதுதான் நமக்கு உள்ள எளிய வழி…
இவ்வாறு அவர் கூறினார்.