வேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற பரிமாணத்தை அடையும் என்றும் கூறியுள்ளார் புகழ்பெற்ற வைராலஜிஸ்ட் டாக்டர்.ஜேகப் ஜோகன்.

இவர், வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்திலிருந்து, இவர் அதுதொடர்பான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

அவர் கூறியுள்ளதாவது, “கொரோனா பரவல் என்பது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. இது அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் உள்ளூர் நோய் என்ற நிலையில் பரிணாமம் பெறும்” என்றார்.

கொரோனா வைரஸின் அதிகளவிலான வடிவ மாற்றங்களுக்கான வாய்ப்புகள் குறித்து கேட்டபோது, “அதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமெனில், உலகளாவிய தற்போதைய திரிபிலிருந்து விடுபட வேண்டும்.

தற்போதைய நிலையில், ஒரு திரிபு மட்டுமே உள்ளது. ஆனால், வேறுபல திரிபுகள் வரும் நாட்களில் உருவாகாது என்பதற்கு உத்தரவாதமில்லை” என்றுள்ளார் அவர்.