ஸ்ரீநகர்

ற்போதைய கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து நிற்கும் ராகுல் காந்தியை வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும் எனக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெக்பூபா முஃப்தி கூறியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி காஷ்மீரில் விதி எண் 377 விலக்கப்பட்டு அம்மாநிலத்து அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது.  மேலும் காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.  முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இணையம் உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  காஷ்மீருக்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் செல்ல அப்போது தடை விதிக்கப்பட்டிருந்தது.  அந்த தடையையும் மீறி ராகுல் காந்தி தைரியமாகக் காஷ்மீர் சென்றார்.  ஆனால் அவரை ராணுவம் தடுத்துத் திருப்பி அனுப்பியதால் அவரால் காஷ்மீர் மாநிலத்துக்குள் நுழைய முடியவில்லை.  ஆயினும் அவர் தொடர்ந்து  மத்திய அரசுக்கு எதிராக உள்ளார்.

முன்னாள் காஷ்மீர் முதல்வரும் பிடிபி கட்சித் தலைவருமான மெக்பூபா முஃப்தி தனது டிவிட்டரில், ”அரசு விரும்பும் அனைத்தையும் ராகுல் காந்தி கடுமையாக எதிர்க்கிறார்.  அவர் ஒருவர்தான் உஐயை பேசத் துணிந்த ஒரே அரசியல்வாதி. 

புதிய இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலர்  மற்றும் அரசுடன் நட்பு பாராட்டும் முதலாளிகளின் பிடியில் சிக்கி உள்ளது என்பதே உண்மையாகும்.

அவர் தற்போதைய சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து நிற்பதற்காக அவரை வரலாறு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.” எனப் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் அவர் மத்திய அரசின் செல்ல அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பின் மூலம் வேளான் சட்டத்தை எதிர்த்து நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க நினைப்பதாக் குறிப்பிட்டுள்ளார்.