சென்னை: தமாகா தலைவரும், முன்னாள் எம்பியுமான ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

கடந்த ஆண்டும் நவம்பர் 11ம் தேதி சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உயிர் இன்று பிரிந்தது.
2001ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தமிழகத்தில் இருந்து 2 முறை மாநிலங்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமாகா துணைத் தலைராகவும் ஞானதேசிகன் பதவி வகித்துள்ளார். 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.
அவருக்கு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel