மும்பை: சையது முஷ்டாக் அலி டி-20 உள்நாட்டுத் தொடரில், மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில், கேரளாவின் முகமது அசாருதீன், அத்தொடரின் வரலாற்றில் 2வது அதிகவேக சதத்தை அடித்ததுடன், மூன்றாவது அதிவேக இணைவு சதத்தையும் அடித்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், இச்சாதனைகளைப் படைத்தார் அசாருதீன்.
மொத்தம் 37 பந்துகளில் தனது சதத்தை அடித்த அசாருதீன், மொத்தம் 54 பந்துகளை சந்தித்து 137 ரன்களை விளாசினார். தற்போது 26 வயதாகும் அசாருதீன், தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களை விளாசினார்.
இவரின் மரண ஆட்டம் காரணமாக, மும்பை அணி நிர்ணயித்த 197 ரன்கள் என்ற இலக்கை, கேரள அணி வெறும் 15.5 ஓவர்களிலேயே எட்டி வென்றது.