சென்னை: திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி உள்ளது.
அவ்வகையில் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் மற்றும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கான விருதாளர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
2021ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது – முனைவர் வைகைச்செல்வன்
2020ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது – அ. தமிழ்மகன் உசேன்
அண்ணல் அம்பேத்கர் விருது – வரகூர் அ. அருணாச்சலம்
பேரறிஞர் அண்ணா விருது – அமரர் கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன்
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – முனைவர் வீ. சேதுராமலிங்கம்
பெருந்தலைவர் காமராசர் விருது – முனைவர் ச. தேவராஜ்
மகாகவி பாரதியார் விருது – கவிஞர் பூவை செங்குட்டுவன்
பாவேந்தர் பாரதிதாசன் விருது – பாடலாசிரியர் அறிவுமதி
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – முனைவர் வீ. சேதுராமலிங்கம்
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – வி.என். சாமி
சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருது – 2020ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்
கபிலர் விருது – செ. ஏழுமலை
கம்பர் விருது – மருத்துவர் எச்.வி. ஹண்டே
சொல்லின் செல்வர் விருது – நாகை முகுந்தன்
உமறுப்புலவர் விருது – ம. அ. சையத் அசன் (எ) பாரிதாசன்
ஜி.யு.போப் விருது – ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முனைவர் உல்ரீகே நிகோலசு
இளங்கோவடிகள் விருது – மா. வயித்தியலிங்கன்
அம்மா இலக்கிய விருது – முனைவர் தி. மகாலட்சுமி
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது – ஆ. அழகேசன்
மறைமலையடிகளார் விருது – மறை. தி. தாயுமானவன்
அயோத்திதாசப் பண்டிதர் விருது – முனைவர் கோ.ப. செல்லம்மாள்
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் ஊரன் அடிகள்
காரைக்கால் அம்மையார் விருது – முனைவர் மோ. ஞானப்பூங்கோதை ஆகியோருக்கு வழங்கப்படும்.
இவ்விருதுகள் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் அவர்களால் வழங்கப்பட உள்ளன. விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக 1 லட்சம் ரூபாயும், தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்பிற்கு 5 லட்சம் ரூபாயும், தமிழ்ச் செம்மல் விருது பெறும் விருதாளர் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 25 ஆயிரமும் வழங்கப்படும். மேலும், இவர்களுக்கு விருதுக்கான தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.