டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,79,913 ஆக உயர்ந்து 1,51,364 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 12,481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,04,79,913 ஆகி உள்ளது. நேற்று 166 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,51,364 ஆகி உள்ளது. நேற்று 18,578 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,01,10,710 ஆகி உள்ளது. தற்போது 2,13,504 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 2,438 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,71,552 ஆகி உள்ளது நேற்று 40 பேர் உயிர் இழந்து மொத்தம் 50,101 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,286 பேர் குணமடைந்து மொத்தம் 18,67,988 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 52,288 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 496 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,28,055 ஆகி உள்ளது இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,144 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 797 பேர் குணமடைந்து மொத்தம் 9,06,548 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,344 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 121 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,85,037 ஆகி உள்ளது இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,131 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 213 பேர் குணமடைந்து மொத்தம் 8,75,456 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,450 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 682 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,26,943 ஆகி உள்ளது இதில் நேற்று 6பேர் உயிர் இழந்து மொத்தம் 12,228 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 869 பேர் குணமடைந்து மொத்தம் 8,07,744 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,971 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 3,110 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,14,259 ஆகி உள்ளது. இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,323 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,922 பேர் குணமடைந்து மொத்தம் 7,47,389 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 63,343 பேர் சிகிச்சையில் உள்ளனர்.