மும்பை:
ரியல் எஸ்டேட் துறையின் காப்பீட்டு கட்டணத்தை மகாராஷ்டிர அரசு 50% குறைத்துள்ளது.
மகாராஷ்டிரா அமைச்சரவை இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை கட்டுமானத்திற்கான 50% காப்பீட்டு கட்டணத்தை குறைத்துள்ளது.
காப்பீட்டு கட்டணத்தை குறைத்த மகாராஷ்டிர அரசு, இந்த திட்டம் டெவலப்பர்களுக்கு 50 சதவீத நன்மை பயக்கும் என்று தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தின் மூலம் நன்மை அடையும் டெவலப்பர்கள் இத்திட்டத்தை வாங்குபவர்களிடமிருந்து முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்களை வசூலிக்க கூடாது என்ற முக்கிய நிபந்தனையை வைத்துள்ளது.
நாட்டில் கொரோனா முழு அடைப்பு ரியல் எஸ்டேட் துறையின் நிலைமை மற்றும் பணபுழக்க நெருக்கடியை மோசமாக்கியுள்ளது, ஆகையால் தற்போது மகாராஷ்டிர அரசு கொண்டுவந்திருக்கும் இத்திட்டம் டெவலப்பர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும் திட்டமாக உள்ளது, இந்த நடவடிக்கை மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சிவசேனா அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.