மும்பை
தொலைக்காட்சி மூலம் மந்திர தந்திர பொருட்களை விற்பனை செய்வதை மும்பை நீதிமன்றம் தடை செய்துள்ளது.
தொலைக்காட்சிகள் மூலம் பொருட்களை விற்பனை செய்வது மிகவும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனைத்து மொழிகளிலும் அனைத்து சேனல்களிலும் தாயத்து, யந்திரம் உள்ளிட்டவை விற்பனை செய்வது மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மூட நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன.
இதையொட்டி இந்த விற்பனைகளைத் தடை செய்யக் கோரி பொதுநல வழக்கு ஒன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் இந்த விற்பனையைத் தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், “எந்த ஒரு பொருளையும் அதிசயமானது மற்றும் இயற்கைக்கு எதிரான சக்திகளைக் கொண்டது எனத் தொலைக்காட்சி சேனலக்ள் மூலம் விபனை செய்வதை நீதிமன்றம் சட்டவிரோதம் என அறிவித்துள்ளது.
மேலும் இது போன்ற தயாரிப்புக்களை இவ்வாறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் விற்பனை செய்வதில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்யலாம் என உத்தரவிடுகிறது.” எனக் கூறப்பட்டுள்ளது.