வாரணாசி:

பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசிகளை சைக்கிளில் கொண்டு சென்ற அவலம் தற்போது அம்பலமாகியுள்ளது.

இந்தியாவில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள வரும் நிலையில், உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதை தடுக்கும் நோக்கில், கொரோனா தடுப்பூசிக்கு போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி போடும் பணிகளுக்கான ஒத்திகை நடத்தப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் இந்த தடுப்பூசி கொண்டு செல்வதில் சிக்கல் நிலவி வருவதாக தெரிய வந்துள்ளது. இதை நிருபிக்கும் வகையில் பிரதமரின் வாரணாசி தொகுதியில் உள்ள பெண்கள் மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசியை சைக்கிளில் கொண்டு செல்லும் அவலம் தற்போது அம்பலமாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் இந்த அவலம் நடந்துள்ளது. அங்குள்ள பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது சைக்கிளில் கொரோனா தடுப்பூசியை எந்த வித பாதுகாப்பும் இன்றி கொண்டு சென்றுள்ளனர்.

பிரதமரின் தொகுதியிலேயே நடந்துள்ள இந்த அவலத்தை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்து செல்வது சரியா என்றும், இந்த மருந்து பாதுகாப்பானதா? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து சவுகாத் பெண்கள் மருத்துமனையின் உயர் அதிகாரி விளக்கம் அளிக்கையில், தடுப்பூசி பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட வேனில் கொண்டு செல்லப்பட்டது வருகிறது. ஆனால், எதிர்பாராத விதமாக இந்த மருந்தை ஊழியர் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் இந்த மருந்தின் பாதுகாப்புக்காக காவல் துறையினர் உடன் சென்றனர் என்று தெரிவித்துள்ளார்.