ஜெனிவா: உலகளவில், புத்தாண்டு தினத்தில், இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளது யுனிசெப் அமைப்பு.

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; புத்தாண்டு நாளான ஜனவரி 1ம் தேதி உலகளவில் குழந்தைகள் பிறப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 1ம் தேதி உலகம் முழுவதும் 3,71,500 குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், அதில் அதிகபட்சமாக இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், 2021ம் ஆண்டின் முதல் குழந்தை பிஜியிலும், அன்றைய தினத்தில் கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறந்துள்ளது.

இந்தியா(59,995), சீனா(35,615), நைஜீரியா(21,439), பாகிஸ்தான்(14,161), இந்தோனேஷியா(12,336), எத்தியோப்பியா(12,006), அமெரிக்கா(10,312), எகிப்து(9,455), வங்கதேசம்(9,236), காங்கோ(8,640) ஆகிய 10 நாடுகளில் மட்டும் ஒட்டுமொத்த குழந்தை பிறப்பு எண்ணிக்கையில் பாதிக்கும்மேல் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.