டெல்லி: மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வரும் 29ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் வரை முதல் அமர்வாகவும், மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை 2ம் அமர்வாகவும் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
இந் நிலையில் காணொளி வாயிலாக மத்திய அமைச்சரவை கூட்டம் வரும் 6ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி நிலை, விவசாயிகள் போராட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.