சென்னை: அதிமுக துணைஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, வரும் 6–ந் தேதி மற்றும் 7–ந் தேதி ஆகிய 2 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். அப்போது 6 இடங்களில் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் என அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் 6 மற்றும் 7ந்தேதி ஈரோட்டில் பிரச்சாரம் செய்கிறார்.
முதலமைச்சரின் ஈரோடு மாவட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் குறித்து இன்று அண்ணா தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
6–ந் தேதி – புதன் கிழமை
காலை 9 மணி – பவானி – பொதுக்கூட்டம்; 10 மணி – கே.எம்.பி. மஹால் – சிறு/குறு தொழில் முனைவோருடன் கலந்துரையாடல்; 11 மணி – அந்தியூர் – பொதுக்கூட்டம்; மதியம் 12 மணி – வாரி மஹால் – வெற்றிலை கொடி விவசாயிகளுடன் கலந்துரையாடல்; 1 மணி – அத்தாணி; 1.30 மணி – கள்ளிப்பட்டி; 3.30 மணி – நால்ரோடு; 4 மணி – சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் வரவேற்பு
4.45 மணி நல்லூர் (இ.பி.பி. மஹால்) – உள்ளூர் பிரமுகர்களுடன் கலந்துரையாடல்; 5.30 மணி – பு.புளியம்பட்டி – வரவேற்பு; 6.30 மணி – பு.புளியம்பட்டி நகராட்சி – -காந்தி நகர் – உள்ளூர் பிரமுகர்களுடன் கலந்துரையாடல்; 7 மணி – நம்பியூர் – வரவேற்பு; 9 மணி – கோபிசெட்டிபாளையம் பொதுக்கூட்டம்
7–ந் தேதி – வியாழக்கிழமை
காலை 9 மணி – பன்னீர்செல்வம் பார்க் – வரவேற்பு; 9.30 மணி – ஈரோடு – மாவட்டக் கழக அலுவலகம், பாசறை, 10 மணி – மாரியம்மன் கோயில் வீரப்பன்சத்திரம் – பொதுக்கூட்டம்; 11.30 மணி – ஹிந்து கல்வி நிலையம் – தேநீர்; 12 மணி – சித்தோடு – வரவேற்பு; 12.30 மணி – தி வேபேரர் ரிசார்ட் வில்லரசம்பட்டி – தொழில் முனைவோர், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்.
பகல் 2.30 மணி – ஊத்துக்குளி – வரவேற்பு; 3.15 மணி – சென்னிமலை – வரவேற்பு; 4 மணி – ஓடாநிலை – பொதுக்கூட்டம் மற்றும் மஞ்சள் விவசாயிகளுடன் கலந்துரையாடல்; 4.45 மணி – அரச்சலூர் – வரவேற்பு, சிவசக்தி திருமண மண்டபம் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் கலந்துரையாடல்; 5.30 மணி – அவல்பூந்துறை – வரவேற்பு; 6.30 மணி – ஸ்ரீ பிளஸ் மஹால் பெருந்துறை – கைத்தறி மற்றும் சக்தி தறி தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் மற்றும் உள்ளூர் பிரமுகர்களுடன் கலந்துரையாடல்; இரவு 7.30 மணி – பெருந்துறை பொதுக்கூட்டம்.
இவ்வாறு தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.