சென்னை

ன்லைன் செயலி மூலம் அநியாய வட்டிக்கு கடன் அளித்து கொடுமை செய்ததாக இரு சீன நாட்டினர் உள்ளிட்ட 4  பேரைத் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

தற்போது மக்களிடையே கொரோனா ஊரடங்கு காரணமாகப் பணி இழப்பு ஏற்பட்டு கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.   அதைப்  பயன்படுத்தி தற்போது ஒரு சிலர் மக்களுக்கு அதிக வட்டிக்குக் கடன் அளித்து லாபம் ஈட்டி வருகின்றனர்.  இதற்காக அவர்கள் மொபைல் செயலியைப் பயன்படுத்தி கடன் அளிக்கின்றனர்.  வாங்கிய கடனை திருப்பி தர முடியாதவர்களை இவர்கள் மிகவும் கொடுமைப் படுத்துவதாகவும் தகவ்லகள் வருகின்றன.

 

இந்த கொடுமை தாங்காமல் கடன் வாங்கியோர் தற்கொலை செய்து கொள்வதும் நிகழ்ந்து வருகிறது.  இது குறித்து சென்னையைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார்.  அவர் கொரோனா ஊரடங்கால் பணி இழந்து மிகவும் நிதி நெருக்கடியில் சிக்கிய போது சமுக ஊடக விளம்பரத்தின் மூலம் எம் ருபி என்னும் செயலியைப்  பற்றி அறிந்துள்ளார்.  உடனடி கடன் அளிக்கும் அந்த செயலி மூலம் அவர் ரூ.5000 கடன் பெற்றுள்ளார்.

அதில் அவருக்குப் பணம் அளிக்கும் போது ரூ.1500 வட்டியாகப் பிடிக்கப்பட்டு மீதம் ரூ.3500 மட்டுமே அவருடைய கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.  இதைத் தவிர அவர் மாதத்துக்கு 2% வட்டியும் செலுத்த வேண்டி இருந்தது.   ஆயினும் திடீரென அவருடைய கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டு அதை செலுத்த கூறி பலவிதமான மிரட்டல் தொலைப்பேசி அழைப்புக்கள் வந்துள்ளன.  அதையொட்டி அவர் புகார் அளித்துள்ளார்.

நேற்று இந்த புகாரின் அடிப்படையில் பெங்களூருவில் 2 சீன நாட்டினர் உள்ளிட்ட நால்வர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்   கைது செய்யப்பட்ட இந்தியர்கள் மூலம் சீனர்கள் கால் செண்டர்கள் நடத்தி அதன் மூலம் அநியாய வட்டிக்குக் கடன் அளித்துள்ளனர்.   இங்கு  பணி புரிவோர் வாரத்துக்கு 10 பேருக்குக் கடன் வழங்க ஏற்பாடு செய்யவில்லை எனில் அவர்களை பணியை விட்டு நீக்குவோம் என மிரட்டப்பட்டுள்ளனர்.

விசாரணையில் இந்தியர்கள் பெயர் பிரமோதா மற்றும் பிரவின் என தெரிய வந்துள்ளது.  இவர்களுடைய கால் செண்டரில் 110 பேர் பணியில் அமர்த்தப்பட்டு அவர்கள் நாடெங்கும் கடன் வாங்குவோரைப் பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.    இவர்கள் இருவரும் ஸியோவ் யமாவ் மற்றும் வூ யுவன்லின் என்னும் அந்த இரு சீனர்களிடம் பணி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த இரு சீனர்களின் வாக்குமூலத்தின்படி இந்த கடன் மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டு வந்தர் ஹாங் என்னும் சீனர் என தெரிய வந்துள்ளது.  இவருடைய ஆலோசனையின் பெயரில் எம் ருபி, மை கேஷ், அவுரோரா லோன், குவிக் லோன், டிமணி, ரேபிட் லோன், ஈசி கேஷ், நியூ ருபி, ருபி லோன் என்னும் செயலிகள் செயல்பட்டு வந்ததும் இதை வடிவமைத்தவர் நூதம் ராம் என்பவர் குறித்த விவரங்களும் சீனர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் தற்போது சென்னையில் மேலும் விசாரணையில் உள்ளனர்