டெல்லி: கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், புனே சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி ஆகியவை  இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

அவசர கால பயன்பாட்டிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், தற்போது உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை அவசர கால தேவைக்காக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனாலும் இறுதியான முடிவை இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பே எடுக்க உள்ளது, குறிப்பிடத்தக்கது.