லாகூர்:
பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும்,  வறுமையை ஒழிப்பதற்கும் சீனாவின் தொழில்துறை வளர்ச்சியில் இருந்து தனது  அரசாங்கம் கற்றுக்கொள்ள விரும்புகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்  தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பொருளாதார நிலை மந்தமான நிலையில் உள்ளது மற்றும் உணவு விலைகள் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. இம்ரான் கான் அரசாங்கம் உணவு விலையை கட்டுப்படுத்தவும், அதன் மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகளை வழங்கவும் தவறிவிட்டது.
இதன் விளைவாக, மக்கள் அவரது அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து, 2018’ல் அவரை ஆட்சியில் அமர வைத்ததற்கு வருத்தப்படுகிறார்கள். காய்கறி விலைகள் நாட்டில் உயர்ந்துள்ளன. இஞ்சி விலை கிலோவுக்கு ரூ 1000 வரை சென்றுள்ளது. மிளகாய் ஒரு கிலோ ரூ 200’க்கு விற்கப்படுகையில், ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ 250’க்கு விற்கப்படுகிறது.

விலைகளை கட்டுப்படுத்த இம்ரான் கானின் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரத்தில், அவர் ஒருபோதும் வழங்க முடியாத உயரமான வாக்குறுதிகளை வழங்குவதில் மும்முரமாக இருக்கிறார்.

இம்ரான் கானின் கொள்கைகளை எதிர்க்கட்சிகளும் நாட்டு மக்களும் கேள்வி எழுப்புகின்றனர். பணவீக்கத்தைத் தவிர, பாகிஸ்தானியர்கள் இம்ரான் கான் ஆட்சியின் கீழ் வேலையின்மை மற்றும் பெரிய அளவிலான ஊழல்களால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இம்ரான் கான் ஆட்சியின் கீழ், நாட்டில் ஊழல் சர்வசாதாரணமாக நடக்கிறது.

இம்ரான் கான் எப்போதுமே நாட்டு மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக வெறும் வாக்குறுகிகளை மட்டுமே முன்வைப்பகாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், புத்தாண்டு விழாவில் பேசிய இம்ரான் கான் மீண்டும் தனது குடிமக்களுக்கு வெற்று வாக்குறுதிகளை அளித்துள்ளதாக மக்கள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
பாகிஸ்தானின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்று எதிர்கட்சிகளால் அழைக்கப்படும் இம்ரான் கான் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தனது நாட்டை மிகவும் பின்தங்கிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளார் என குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

ஏற்கனவே விலைவாசி உயர்வால் வாடும் பாகிஸ்தானியர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல் இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பேசியபோது, ​​ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் உணவளிக்க விரும்புவதாகக் கூறினார். குறிப்பாக 2021’ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களுக்கும் சுகாதார பாதுகாப்பு வழங்குவதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அவர் கூறினார்.

குறிப்பிடத்தக்க வகையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும், நிதிகளைத் திருப்புவதற்கும், இதேபோன்ற கொள்கைகளை உருவாக்குவதற்கும் பெயர் பெற்ற நாடு. பாகிஸ்தானின் மொத்த பொதுக் கடன் அதிகரித்த நேரத்தில் இம்ரான் கானின் வாக்குறுதிகள் வந்துள்ளன.

2021’ஆம் ஆண்டிற்கான தனது கருத்துக்களை பட்டியலிடும் போது இம்ரான் கான், வணிகங்களில் முதலீடு, தொழில்களுக்கு உதவுதல், வறுமையைப் போக்க செல்வத்தை உருவாக்குதல் என்று அடுக்கடுக்காக பல வாக்குறுகிகளை அள்ளித் தெளித்தார். மேலும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு விரைவில் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

“இந்த நாட்டில் யாரும் பசியுடன் தூங்கப் போவதில்லை என்பதை நான் தனிப்பட்ட முறையில் உறுதி செய்வேன்” என்று அவர் கூறினார்.

ஆனால் இம்ரான் கானின் ஆட்சியின் கீழ், வேலையின்மை பெரிதாக்குதலுடன் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. உலக பொருளாதார அமைப்பின்படி, பாகிஸ்தானில் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 8.5 சதவீதமாக உள்ளது. அங்கு 64 சதவீத மக்கள் 30 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அனைத்து பாகிஸ்தானியர்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு அளிப்பதாக இம்ரான் கான் அளித்த வாக்குறுதியானது, நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு மோசமான நிலையில் இருந்து மிக மோசமாகி வரும் நேரத்தில் வந்துள்ளது. தொற்றுநோய்களுக்கு மத்தியில் நாடு மருத்துவமனைகளில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது மற்றும் உயிர்வாழ அதன் நீண்ட கால நட்பு நாடான சீனாவை சார்ந்துள்ளது.

நாட்டின் பொருளாதார நிலை படுமோசமாக இருக்கையில், அனைவருக்கு உணவு மற்றும் சுகாதாரத்தை நன்கொடை பெற்று தான் இம்ரான் கான் அரசால் பூர்த்தி செய்ய முடியும் என மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.