புதுடெல்லி: இந்திய டெஸ்ட் அணிக்கான துணைக் கேப்டனாக முதல்முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் ரோகித் ஷர்மா.
இரண்டாவது டெஸ்ட்டில் துணைக் கேப்டனாக செயல்பட்ட சத்தீஷ்வர் புஜாராவிடமிருந்த பொறுப்பு, ரோகித்திடம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் ரோகித் ஷர்மா.
ஆனால், டெஸ்ட் அணிக்கு இப்போதுதான் முதன்முறையாக துணைக் கேப்டன் ஆகியுள்ளார். ரோகித் ஷர்மாவின் இந்தப் புதிய பொறுப்பு குறித்து, இந்திய அணியின் நிர்வாகம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“வெள்ளைப் பந்து போட்டிகளுக்கு துணைக் கேப்டனாக இருப்பவர் ரோகித் ஷர்மா. எனவே, இந்திய டெஸ்ட் அணியில், ரஹானே தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் நிலையில், ரோகித்திற்கு புதிய பொறுப்பு வந்து சேர்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை” என்றுள்ளது இந்திய கிரிக்கெட் நிர்வாகம்.